Current Affairs for TNPSC Exams 26.01.2019 and 27.01.2019

- 1/27/2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் 14, ஜனவரி முதல், 22, ஜனவரி வரை  - 2019 (Current Affairs 26, 27, January - 2019)

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்:
          மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, இங்கு ரூ.1,264 கோடியில் கட்டப்பட உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு (எய்ம்ஸ் மருத்துவமனை) அடிக்கல் நாட்டினார். மதுரை அருகேயுள்ள தோப்பூரில் 201.75 ஏக்கரில் இந்த மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை விமான நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மண்டேலா நகரில் நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வுகளுக்கான புதிய விதிமுறை விரைவில் அறிவிக்கப்படும்: அண்ணா பல்கலைக்கழகம்:
          அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வு முறையில் மாற்றம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் புதிய விதிமுறைகள் குறித்து அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் பருவத் தேர்வில் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியது. அந்த புதிய நடைமுறையின்படி ஒரு பருவத்தேர்வில் தோல்வியடையும் பாடத்துக்கான மறுத்தேர்வை இரண்டாவது பருவத்தேர்வில் எழுத முடியாது, மூன்றாவது பருவத்தேர்வில் தான் எழுத முடியும்.மேலும் மூன்று மறுத்தேர்வுகள் மட்டுமே எழுத முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர்: சாம்பியன் பட்டம் வென்றார் ஒஸாகா:
         ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் செக் குடியரசின் குவிட்டோவாவை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா மற்றும் செக் குடியரசின் குவிட்டோவா ஆகியோர் மோதினர்.

பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு: தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்:
          2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறும் 112 பேர் அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பத்ம விபூஷண் விருதுகள் 4 பேருக்கும், பத்ம பூஷண் விருதுகள் 14 பேருக்கும், பத்மஸ்ரீ விருதுகள் 94 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் இருந்து 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்காரு அடிகளார் - ஆன்மீகம்
சரத் கமல் விளையாட்டு - டேபிள் டென்னிஸ்
நார்தகி நட்ராஜ் - கலை 
மதுரை சின்னப்பிள்ளை - சமூகப்பணி 
ஆர் வி ரமணி - மருத்துவம் 
ஆனந்தன் சிவமணி - கலை 
ராமசாமி வெங்கடசுவாமி - மருத்துவம்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு:
         முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் பிரணாப் முகர்ஜி. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்திலிருந்து மத்திய அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும் இருப்பவர். பின்னர் தொடர்ந்து வந்த ராஜிவ் காந்தி, நரசிம் மராவ் மற்றும் மன்மோகன் சிங் என அனைத்து காங்கிரஸ் அரசுகளிலும் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு:
             இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சார்பில் வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததற்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த 690 கிலோ எடைகொண்ட 'மைக்ரோசாட்-ஆர்' செயற்கை கோள், 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்பு மற்றும் ரிபாத் ஷரூக், ஸ்ரீமதி கேசன் உள்ளிட்ட மாணவர்கள் இணைந்து மிகச்சிறிய அளவில் 34 கிராம் எடையில் தயாரித்துள்ள 'கலாம் சாட்' என்ற செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 1-வது ஏவுதளத்தில் இருந்து நேற்று இரவு 11.37 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

Advertisement

 

Start typing and press Enter to search