Current Affairs for TNPSC Exams 23.01.2019 and 24.01.2019

- 1/24/2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் 14, ஜனவரி முதல், 22, ஜனவரி வரை  - 2019 (Current Affairs 23 to 24, January - 2019)

மத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்:
     மத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சிகிச்சை எடுப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அதேசமயம், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாடு இன்று தொடக்கம்: முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் நிர்மலா பங்கேற்பு:
          உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் புதன்கிழமை (ஜன. 23) தொடங்குகிறது. மாநாட்டை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை-2019-ஐ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்.

தில்லியில் நேதாஜி நினைவு அருங்காட்சியகத்தை துவக்கி வைத்தார் மோடி:
                   தில்லியில் நேதாஜி நினைவு அருங்காட்சியகத்தை புதனன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் 'இந்திய தேசிய ராணுவம்' என்ற படைப்பிரிவை துவக்கி ஆயுதப் போராட்டத்தில் மகத்தான பங்கு வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவரது பிறந்தநாளான இன்று அவரது நினைவை போற்றும் வகையிலும் தில்லி செங்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

உலக முதலீட்டாளர் மாநாடு துவங்கியது: வானூர்தி, பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியீடு:
          உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் புதன்கிழமை காலை தொடங்கியது.மாநாட்டை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை-2019-ஐ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

அரசியல் தொடர்பான விளம்பரங்களில் வெளிப்படைத்தன்மை: கூகுள் உறுதி:
                மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் தொடர்பான விளம்பரங்களில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. மேலும், கூகுள் வலைதளத்தில் வெளியிடப்படும் அரசியல் விளம்பரங்கள் தொடர்பான விவரங்கள் குறித்தும், அதற்கு செலவிடப்படும் தொகை குறித்தும் தகவல் அளிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement

 

Start typing and press Enter to search