Current Affairs for TNPSC Exams 25.01.2019

- 1/25/2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் 14, ஜனவரி முதல், 22, ஜனவரி வரை  - 2019 (Current Affairs 25, January - 2019)

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு:
         இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சார்பில் வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததற்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த 690 கிலோ எடைகொண்ட 'மைக்ரோசாட்-ஆர்' செயற்கை கோள், 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்பு மற்றும் ரிபாத் ஷரூக், ஸ்ரீமதி கேசன் உள்ளிட்ட மாணவர்கள் இணைந்து மிகச்சிறிய அளவில் 34 கிராம் எடையில் தயாரித்துள்ள 'கலாம் சாட்' என்ற செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 1-வது ஏவுதளத்தில் இருந்து நேற்று இரவு 11.37 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

ரயில் நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்தது 100 அடி உயர கொடிக் கம்பம்:
         கோவை ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசியக் கொடிக் கம்பம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நாடு முழுவதிலும் உள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த 78 ரயில் நிலையங்களில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு பெரிய அளவிலான தேசியக் கொடி பறக்கவிடப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது. இதில் மும்பை உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட்:
         ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 'மைக்ரோசாட்-ஆர்', 'கலாம் சாட்' ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் இன்று வெற்றிகரமாக இரவு 11.37 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 'மைக்ரோசாட் - ஆர், கலாம்சாட் என்ற குறைந்த எடை உடைய செயற்கைகோளையும் சுமந்தபடி, 'பி.எஸ்.எல்.வி., - சி 44' ராக்கெட்டை விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து ராக்கெட், புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

மத்திய அரசு பணிகளில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 10% இட ஒதுக்கீடு அமல்:
         மத்திய அரசு பணிகளில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 10% இட ஒதுக்கீடு அமல் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேறியது. பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அது அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; ரூ.3.42 லட்சம் கோடி முதலீடு: முதல்வர் பெருமிதம்:
          சென்னை சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்திற்கு ரூ.3.42 லட்சம் கோடி முதலீடு கிடைக்கவுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் புதன்கிழமை துவங்கி சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று ஆறு நாட்டு தூதர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Advertisement

 

Start typing and press Enter to search