Current Affairs for TNPSC Exams 14 to 22, January 2019

- 1/22/2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் 14, ஜனவரி முதல், 22, ஜனவரி வரை  - 2019 (Current Affairs 14 to 22, January - 2019)



இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக 
பதிவு:
இந்தோனேசியாவின் சும்பா தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவாகி உள்ளது.இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சும்பா தீவின் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.29 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை சும்பாவின் வெயின்கபு நகரத்தில் வசிக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாடு: மோடி இன்று தொடங்கி வைக்கிறார்:உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் 15-ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின (பிரவாசி பாரதிய திவஸ்) மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மோரீஷஸ் பிரதமர் பிரவீண் ஜகந்நாத் பங்கேற்கிறார். பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், இரு தரப்பு உறவு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச இருக்கிறார். புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்கு என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. முன்னதாக, திங்கள்கிழமை இளையோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும்: ஐஎம்எஃப் கணிப்பு:
சர்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.2019-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாகவும், 2020-ஆம் ஆண்டில் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த தனது அறிக்கையை ஐஎம்எஃப் அமைப்பு வாஷிங்டனில் திங்கள்கிழமை வெளியிட்டது. இதில் சர்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா நீடிக்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை இப்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் நீர் பங்கீடு பிரச்னைகளுக்கு இந்த திட்டம் தீர்வு காணும்: நிதின் கட்கரி:
கோதாவரி, காவிரி நதிகளை இணைப்பதற்கு ரூ.60,000 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கை மத்திய அமைச்சரவையில் சமர்பிக்க தயாராக உள்ளது என மத்திய நீர் வள மற்றும் நதிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாஜக நிர்வாகிகளிடம் பேசுகையில், கோதாவரி நதியை கிருஷ்ணா நதியுடனும், கிருஷ்ணா நதியை பெண்ணாறு நதியுடனும், தமிழகத்தில் உள்ள காவிரி நதியுடனும் இணைக்கவுள்ளோம். 1,100 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாய் கலக்கிறது. அதேசமயம், தமிழகம் கர்நாடகம் இடையே 45 டிஎம்சி தண்ணீருக்கு பிரச்னை உள்ளது.

மேக்கேதாட்டு அணை: விரிவான திட்ட அறிக்கையை சமர்பித்தது கர்நாடக அரசு:
மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட 
அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்பித்தது. காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது. மேக்கேதாட்டுவில் அணை கட்டினால், தமிழகத்தின் நலன் பாதிக்கப்படும் என்று தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இதைத்தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதிக்குத் தடை கோரி தமிழக அரசு கடந்தாண்டு நவம்பர் 30-ஆம் தேதியும், புதுச்சேரி அரசு டிசம்பர் 8-ஆம் தேதியும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். மேலும், மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி தொடுத்தது.

60 வயதைத் தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு ஓய்வூதியம்: உ.பியில் யோகியின் அதிரடி பிளான் உத்தர பிரதேசத்தில் 60 வயதைத் தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்கில் கும்பமேளா தற்போது விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலம் 
முழுவதும் உள்ள 60 வயதை தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு இனி 
மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என மாநில முதல்வர் யோகி 
ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.


நேபாளத்தில் 100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடை:
நூறு ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து நேபாள நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 13 லட்சம் பேர் நேபாளத்துக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். நேபாளத்தில் அவர்களது உள்நாட்டு பணத்துக்கு நிகராக இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதை, அந்நாட்டு அரசு ஆய்வின் மூலம் கண்டுகொண்டது.எனவே இதைக் கட்டுப்படுத்தும் விதமாக 100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு தடை விதிப்பது என்று நேபாள நாட்டு அமைச்சரவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்மானித்தது.

நடமாடும் கடவுள்' சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமி 111வது வயதில் காலமானார்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்தகங்கா மடாதிபதியும், லிங்காயத் தலைவருமான சிவகுமாரசுவாமி இன்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 111. கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்தகங்கா மடம் உலகப் புகழ்பெற்றது. இதன் மடாதிபதி சிவகுமாரசாமி. இவருக்கு கடந்த சில நாட்களாக நுரையீரல் தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.


கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த சீனாவின் 
பொருளாதார வளர்ச்சி:
கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார 
வளர்ச்சி குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உலகில் பொருளாதார ரீதியாக வலுவான நாடுகளில் சீனாவும் ஒன்று. உலகப் பொருளாதார வளர்ச்சியிலும் சீனாவின் பங்கு முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

பேருந்து பயணத்தின் போது இனி அதற்காக நிறுத்தம் வரைக் காத்திருக்க வேண்டாம்:
அரசு இயக்கும் செமி ஸ்லீப்பர் மற்றும் புறநகர்ப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தங்களது தாகத்தைத் தீர்க்க பேருந்து நிறுத்தம் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ரயில்கள் மற்றும் தனியார் சொகுசுப் பேருந்துகளைத் தொடர்ந்து மாநில அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் இயக்கும் பேருந்துகளில் அம்மா குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

மருந்து அட்டைகளில் "பார் கோடு':
தமிழக அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களின் பயன்பாட்டுக்காக கொள்முதல் செய்யப்படும் மருந்துகளில் "பார் கோடு" (தனித்துவ அடையாளக் குறியீடு) அச்சிடப்படுவதைக்ட்டாயமாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருந்து உற்பத்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில் உள்ள சாதக, பாதகங்களைப் பரிசீலித்த பிறகு இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலக சாதனை படைத்தது விராலிமலை ஜல்லிக்கட்டு:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி புதிய உலக சாதனை படைத்துள்ளது. உலக சாதனைக்காக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,353 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்க ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்.

சிலி கடல்பகுதியில் பயங்கர நிலநடுக்கம்:
சிலி நாட்டின் வடக்கு கடல்பகுதியில் அமைந்துள்ள கோகும்பா பகுதியில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10:32 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8-ஆகப் பதிவானது. கோகும்பா பகுதியின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதியிலிருந்து 15.6 கி.மீ. தூரத்திலும், 53 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சுனாமி ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் கோலி சாதனையை முறியடித்தார் ஆம்லா:
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 27 சதங்கள் எடுத்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை ஹசிம் ஆம்லா முறியடித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி போர் எலிஸபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஆம்லா, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் எடுத்தார்.

தொழிற்சாலைகளை விரிவாக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்:
தமிழகத்தில் தொழிற்சாலைகள் விரிவாக்கம், புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான ஒப்புதல்கள் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்டன. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள பள்ளிகளுக்கு வழிகாட்டியாக செயல்படும்:
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(ஐஐடி), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள்(ஐஐஎஸ்இஆர்) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள், தங்கள் வளாகத்துக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் வழிகாட்டியாக செயல்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

பொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியீடு:
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது. இதுதொடர்பாக மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா! 3-0 என தொடரை வென்றது:
பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டையும் வென்று 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. ஜோகனாஸ்பர்க்கில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 90 ரன்கள் எடுத்தார். இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் சர்ஃபராஸ் அஹமது 50 ரன்கள் எடுத்தார். டுயானே ஆலிவியர் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.முதல் இன்னிங்ஸில் 77 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 303 ரன்கள் எடுத்தது. குயிண்டன் டி காக் 129 ரன்கள் எடுத்து அசத்தினார். 


விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானம்: இரண்டாவது கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு:
கடந்த ஆண்டு கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ல்ஆம் தேதியயன்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட 'லயன் ஏர்' நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நடுவழியில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 189 பேரும் பலியாகினர்.
Advertisement

 

Start typing and press Enter to search