Current Affairs for TNPSC Exams 13, January 2019

- 1/13/2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் 12, ஜனவரி - 2019 (Current Affairs 13. January - 2019)

சென்னை-பெங்களூரு விரைவு ரயில் மைசூரு வரை நீட்டிப்பு:
ரயில் எண்: 12609-சென்னை-பெங்களூரு விரைவுரயில் மைசூரு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயிலின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன் விவரம்: ரயில் எண்: 12609-சென்னை-பெங்களூரு விரைவுரயில் ஜன. 15-ஆம் தேதி முதல் மைசூரு ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.

பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்:
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் அளித்தார். பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் தேர்தல் குறித்த கருத்துகள் பகிர்வதை தடுக்க முடியாது: இந்தியத் தேர்தல் ஆணையம்:
தேர்தலுக்கு முந்தைய 2 தினங்களில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்படுவதைத் தடுக்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. யூ-டியூப், முகநூல், சுட்டுரை உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேர்தல் மற்றும் அரசியல் தொடர்புடைய கருத்துகளை தேர்தல் நடைபெறும் 2 தினங்களுக்கு முன்பு அரசியல்வாதிகள் அல்லது தனிநபர்கள் பகிர்வதை தடுக்க வேண்டும் என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சிந்து நதி உபரி நீர் பாகிஸ்தான் செல்வதை தடுக்க நடவடிக்கை: நிதின் கட்கரி தகவல்:
சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு ஒதுக்கப்படும் தண்ணீர் வீணாக பாகிஸ்தானுக்கு செல்லாமல் தடுக்க மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். மத்திய நீர்வளத்துறை மற்றும் நதிநீர் மேம்பாட்டுத்துறை அமைச்சரான அவர் இத்தகவலை தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சீக்கிய மத குரு பெயரில் நாணயம் வெளியீடு:
டெல்லியில் சீக்கிய மத குரு கோவிந்த் சிங் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவம் பதித்த நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். கலாச்சார துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
Advertisement

 

Start typing and press Enter to search