-->

Current Affairs 12, January 2019 for TNPSC Examinations

- 1/12/2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் 12, ஜனவரி - 2019 (Current Affairs 12. January - 2019)

எம்.ஆட்டோ" செயலி திருச்சியில் அறிமுகம்:
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக செயலி மூலம் பொதுமக்கள் ஆட்டோவை தொடர்பு கொண்டு பயணம் செய்யும் "எம் ஆட்டோ" செயலி திருச்சியில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.நிறுவனர் மன்சூர் அலி கூறுகையில், "ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மக்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் வகையிலும்திருச்சியில் எம் ஆட்டோ என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக நீண்ட நேரம் இளம்பெண் இதயதுடிப்பை நிறுத்தி வைத்த டாக்டர்கள்:
இளம் பெண் ஒருவருக்கு இதயதுடிப்பை முறைப்படுத்தி சீன மருத்துவர்கள் அனைவரையும் பிரம்மிக்க செய்துள்ளனர் . தொடர்ந்து 72மணி நேர போராட்டத்திற்கு பிறகு இவர்கள் இந்த சாதனையை அரங்கேற்றியுள்ளனர்.சீனாவில் உள்ள ஃப்யூஜியான் மாகாணத்தில் நடந்துள்ளது. அங்கு 26 வயது மாணவி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நினைவிழந்து மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதை தொடர்ந்து , மருத்துவமனையில் முதலில் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

2 நாள் அரசு பயணமாக துபாய் சென்றார் ராகுல்காந்தி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் அரசு பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் அளிக்கும் என்றும், இதற்கான அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றும் கூறிய ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்க்கு 2 நீதிபதிகளை பரிந்துரை செய்த கொலீஜியம்:
டெல்லியில் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பு ஆலோசனை கூட்டம் நடத்தியது. சுப்ரீம் கோர்ட்க்கு மொத்தம் 31 நீதிபதிகள் வரை நியமிக்கலாம் ஆனால் தற்போது 26 நீதிபதிகளே பொறுப்பு வகிக்த்து வருகின்றனர். இதனால் சுப்ரீம் கோர்ட்க்கு 2 நீதிபதிகளின் பெயர்களை கொலீஜியம் பரிந்துரை செய்து உள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கன்னா ஆகியோரின் பெயர்கள் அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.

கும்பமேளா விழா கொண்டாட திரளும் பக்தர்கள்:
கும்பமேளா விழா பிரயாக் ராஜ் எனப் பெயர் மாற்றப்பட்ட அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் உள்ளிட்ட நகரங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மாபெரும் ஆன்மீக விழாவான கும்பமேளாவில் கங்கையிலும் யமுனையிலும் புனித நீராட பல லட்சம் பேர் திரள்வது வழக்கம். சாதுக்கள் பலர் யானை மீது பவனி வந்தும் சிலம்பாட்டம் ஆடியும் கும்பமேளாவை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

புதிய சிபிஐ இயக்குனருக்காக 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பரிந்துரை:
சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா ராஜினாமா செய்திருப்பதையடுத்து, 4 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் அப்பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன. மும்பை காவல்துறை ஆணையர் சுபோத்குமார் ஜெய்ஸ்வால் மற்றும் உத்தரப் பிரதேச டி.ஜி.பி. ஓ.பி.சிங் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவிற்கு சுற்றுப்பயணம்:
சீன அதிபரின் அழைப்பை ஏற்று, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், தனி ரயில் மூலம் தனது மனைவி ரி சொல் ஜூவுடன் சென்றார். வட கொரிய அதிபருக்கு சீன அதிபர் ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளித்தார்.

மனிதனால் ஆக்கிரமிக்க முடியாத நிலப்பகுதி:
பூமியிலே மிகவும் குளிர்ந்த பகுதி அண்டார்ட்டிக்கா. புவியின் 7வது கண்டம் என்று அழைக்கப்படும் இப்பகுதி பல்வேறு ஆச்சரியங்களையும், மர்மங்களையும் கொண்டுள்ளது. இந்த கண்டம் முழுவதும் பனிக்கட்டியாலே மூடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 15ஆயிரம் அடிக்குக் கீழே துளையிட்டு சென்றால் மட்டுமே மண்ணை பார்க்க முடியும் (உலகிலேயே மண்திருட்டு நடக்காத பகுதி இதுவாகத்தான் இருக்கும்). புவியின் தென்முனையில் அமைந்திருப்பதால் சூரியவெளிச்சம் ஆறுமாதங்கள் மட்டுமே இருக்கும். இதனால் இதை ஒரு பனிக்கட்டி பாலைநிலம் என்கிறார்கள். இங்கே நிரந்தரமாக மனிதன் வாழ முடியாத அளவிற்கு கிடுகிடுவைக்கும் பனிச்சூழல் நிறைந்து கிடக்கிறது. 

மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் - அவசரநிலையை பிறப்பிக்க டிரம்ப் தீவிர ஆலோசனை:
வாஷிங்டன்: மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக அமெரிக்காவில் அவசரநிலை கொண்டு வருவது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவேன் என அதிபர் தேர்தல் பிரசாரத்திலேயே டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்க செலவினங்களுக்கான நிதி மசோதாவுடன், ரூ.40 ஆயிரம் கோடி செலவில் தடுப்பு சுவர் கட்டுவதற்கும் அனுமதிக்க வேண்டும் என எம்.பி.க்கள் மற்றும் செனட் உறுப்பினர்களிடம் அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார்.

ப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு:
ப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள் இருப்பதை சமீபத்திய ஆய்வில் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ப்ளூட்டோ கிரகத்தை ஆராய நியூ கொரைசான்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2015ம் ஆண்டு நாசா அனுப்பி வைத்தது. பூமியில் இருந்து மிகவும் தூரத்தில் உள்ள மிக சிறிய அளவிலான ப்ளூட்டோ கிரகத்தில் கடும் குளிர் நிலவுகிறது. பூமியில் உள்ள பாலைவனங்களைப் போன்றே ப்ளூட்டோவின் மேற்பரப்பு காணப்படும் என முன்னர் நம்பப்பட்டது. 

அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி:
அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அக்னி 1 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசாவில் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை 700 கிமீ தொலைவில் இருந்து இலக்கை துல்லியமாக தாக்கியது. 

152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்:
பூமியானது சூரியனின் சுற்று வட்ட பாதையில் சுற்றி வருவதை கிரகண பாதை என்று அழைக்கின்றோம். சந்திரனும் பூமியை சிறு வட்டப்பாதையில் சுற்றி வருகின்றது. ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை சரியான கிரகண பாதையில் அமையவில்லை. அது சுமார் 5 டிகிரி சாய்வு கோணத்தில் அமைந்துள்ளது. இதனால் மிக அரிதாக நிலவு பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் உள்ள கற்பனைக் கோட்டை கடக்கும் போது சூரியகிரகணம் ஏற்படுகிறது. எனவே சந்திரனின் பாதை கிரகண பாதையோடு ஒன்றியிருக்கும்போது அமாவாசையின்போது சூரிய கிரகணமும் பவுர்ணமியின்போது சந்திரகிரகணமும் நிகழ்கிறது.இந்த கிரகணம் மேற்கு வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பெருங்கடல் போன்ற பெரும்பாலான பகுதிகளிலும், இந்தியாவிலும் தெரியும். சந்திர கிரகணத்தை திறந்தவெளியில் தொலைநோக்கியின்றி கண்டுகளிக்கலாம். 

ஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்:
ஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில் அழிந்துவரும் விளங்குகளின் பாதுகாப்பு தொடர்பான 69வது மாநாடு தொடங்கியுள்ளது. 

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது:
சிரியா நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அவர்களை ஒடுக்க அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 2000 வீரர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த கூட்டுப்படையினர் அங்கு தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் அதிகளவில் இறந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நாட்டில் உள்ள படைகள் விரைவில் வாபஸ் பெறப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் அறிவித்தார். 

பாக். மக்கள் கட்சி தலைவர்கள் வெளிநாடு செல்ல தடை நீடிப்பு:
பாகிஸ்தானில் போலி பெயர்களில் 30க்கும் மேற்பட்டவங்கி கணக்குகளை தொடங்கி,  முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அவரது சகோதரி பர்யால் தல்பூர் மற்றும் குடும்பத்தினர்  மோசடி செய்ததாக  குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, கடந்தாண்டு  டிசம்பர் 27ம் தேதி சர்தாரி, அவரது சகோதரி தல்பூர், சர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ உள்ளிட்டோர் வெளிநாடு செல்வதற்கு அரசு தடை விதித்தது.  
Advertisement

 

Start typing and press Enter to search